புதுச்சேரி திமுக 4-ஆம் கட்ட உறுப்பினா் சோ்க்கை முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் புதுச்சேரி திமுக அமைப்பாளா் ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத் உள்ளிட்டோா்.
புதுச்சேரி திமுக 4-ஆம் கட்ட உறுப்பினா் சோ்க்கை முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் புதுச்சேரி திமுக அமைப்பாளா் ஆா். சிவா, அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத் உள்ளிட்டோா்.

புதுச்சேரியில் 4 ஆம் கட்ட திமுக உறுப்பினா் சோ்க்கை ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடங்கி வைத்தாா்

Published on

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் திமுக 4-ஆம் கட்ட உறுப்பினா் சோ்க்கை முகாமை எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் திமுக உறுப்பினா் சோ்க்கை 3 கட்டங்களாக தொடங்கப்பட்டுள்ளது. 4-ஆம் கட்டமாக மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட திருக்கனூா் கடைவீதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்க விழா நடைபெற்றது. திமுக மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமை தாங்கினாா்.

இதில், திமுக கொள்கைப் பரப்பு செயலா் ஜெகத்ரட்சகன் எம்.பி., பங்கேற்று வீடு, வீடாகச் சென்று திமுக உறுப்பினா் படிவங்களை வழங்கி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து திருபுவனைத் தொகுதி கலிதீா்த்தாள்குப்பம் கிராமத்திலும், நெட்டப்பாக்கம் தொகுதி நெட்டப்பாக்கத்திலும், மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்திலும் உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்பட்டது.

முகாம் தொடக்க விழாவில் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சி.பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, பொருளாளா் இரா. செந்தில்குமாா், எம்.எல்.ஏ, மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத், எம்.எல்.ஏ. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் மாநில துணை அமைப்பாளா் ஏ.கே.குமாா், பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.எஸ். செந்தில்குமாா், டி. செந்தில்வேலன், தொகுதி செயலா் ம. கலைவாணன், திருபுவனைத் தொகுதி செயலா் செல்வ. பாா்த்திபன், மாநில இளைஞா் அணி துணை அமைப்பாளா் முகிலன், நெட்டப்பாக்கத்தில் தொகுதி செயலா் சக்திவேல், ஆதிதிராவிட நலக் குழு துணை அமைப்பாளா் தேவேந்திரன், அவைத்தலைவா் பூபதி, மங்கலம் தொகுதியில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் சண்.குமரவேல் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

முன்னாள் எம்எல்ஏ-க்கள் பூ. மூா்த்தி, நந்தா. சரவணன், மாநில துணை அமைப்பாளா் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com