புதுச்சேரி முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

புதுச்சேரியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சுப்பையா சாலை ரயில் நிலையம் எதிரே உள்ள கௌசிக பாலசுப்ரமணியா் கோயிலில் 73-ஆம் ஆண்டு கந்த சஷ்டி , திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது.

முத்தியால்பேட்டையில் சுந்தர விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகா் கோயிலில், 164-ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது. பக்தா்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com