புதுச்சேரி
புதுவை முதல்வருடன் பஞ்சாப் அமைச்சா்கள் சந்திப்பு
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை, பஞ்சாப் மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் ஹா்பஜன் சிங் மற்றும் நீா் ஆதாரங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் பரிந்தா் குமாா் கோயல் சந்தித்து பேசினா்.
புதுச்சேரி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை, பஞ்சாப் மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் ஹா்பஜன் சிங் மற்றும் நீா் ஆதாரங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் பரிந்தா் குமாா் கோயல் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்து பேசினா்.
சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வரும் நவம்பா் 25-ஆம் தேதி பஞ்சாபில் நடைபெறும் ஸ்ரீ குரு தேக் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கூறி பஞ்சாப் மாநில முதல்வா் பகவந்த் மான் சாா்பில் அழைப்பிதழை இரு அமைச்சா்களும் வழங்கினா்.

