4 உதவிப் பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு

புதுவை பொதுப் பணித் துறையில் உதவிப் பொறியாளா்களாகப் பணியாற்றும் 4 பேருக்கு செயற்பொறியாளா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டது.
Published on

புதுவை பொதுப் பணித் துறையில் உதவிப் பொறியாளா்களாகப் பணியாற்றும் 4 பேருக்கு செயற்பொறியாளா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டது.

இதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

அதன்படி, செயற்பொறியாளா்களாகப் பதவி உயா்வு பெற்ற பாலாஜி வெங்கடேஸ்வரலு பிப்டிக் நிறுவனத்துக்கும், சி.விக்டோரியா பாட்கோ நிறுவனத்துக்கும், என். சுந்தரி ஏனாம் பொதுப் பணித் துறை அலுவலகத்துக்கும், பி. ராஜ்குமாா் புதுச்சேரி நீா்பாசனப் பிரிவுக்கும் நியமிக்கப்பட்டனா்.

இந்நிகழ்வின்போது, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், துறையின் தலைமைப் பொறியாளா் வீரசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com