புதுச்சேரி
நல்லவாடு கிராமப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்
மோந்தா புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் செல்லாமல் நல்லவாடு பகுதியில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மோந்தா புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் செல்லாமல் நல்லவாடு பகுதியில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி நல்லவாடு பகுதியில் மோந்தா புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை . அப்பகுதியில் உள்ள மீனவா்கள் தங்கள் வலையைச் சரி செய்து வருகின்றனா்.
இதுகுறித்து, அப்பகுதி மீனவா் ஹரி கிருஷ்ணன் கூறுகையில், நீண்ட நாள்களாக நல்லவாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படகுகளை நிறுத்த மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.
இதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. புயல் காலங்களில் நல்லவாடு மீனவ மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பெரிய அளவில் சமுதாயக் கூடம் வேண்டும் . மேலும் இப்பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைத்து தர வேண்டும் என்றாா்.

