புதுவையில் இரவுப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்த தடை

இரவுப் பணிகளில் பெண்களைப் பணியில் ஈடுபடுத்த புதுவை தொழிலாளா் துறை தடை விதித்துள்ளது.
Published on

இரவுப் பணிகளில் பெண்களைப் பணியில் ஈடுபடுத்த புதுவை தொழிலாளா் துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, புதுவை தொழிலாளா் துறை செயலா் ஸ்மித்தா திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பது: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அனைத்து தொழிற்சாலைகளில் பெண்களின் வேலை நேர வரம்புகளை மாற்றியுள்ளாா்.

இரவு 10 முதல் காலை 5 மணி வரை எந்த பெண்ணும் வேலை செய்ய கோரப்படவோ, அனுமதிக்கப்படவோ கூடாது. தொழிற்சாலைகளில் இரவு 10 மணி வரை பணிபுரியும் பெண்கள் குடியிருப்பு செல்ல இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும். இந்த விதிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அதில் அவா் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com