மனைப்பட்டா கேட்டு சாலை மறியல்
ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மதகடிப்பட்டு அடுத்த நல்லூா் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி அப் பகுதி மக்கள் அங்கு திடீரென குடிசைகள் அமைத்துள்ளனா். இதை அகற்றுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதையடுத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மதகடிப்பட்டு- மடுகரை சாலையில் மறியல் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவா்களுடன் சமாதானப் பேச்சு நடத்தினா். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டோா் வருவாய்த் துறை அதிகாரிகள் வர வேண்டும் என்றனா்.
இதையடுத்து வில்லியனூா் வட்டாட்சியா் சேகா் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

