புயல் காரணமாக புதுச்சேரி-ஏனாம் சாலையில் சாய்ந்த மரம்.
புயல் காரணமாக புதுச்சேரி-ஏனாம் சாலையில் சாய்ந்த மரம்.

மோந்தா புயல்: ஏனாமில் 50 மரங்கள் சாய்ந்தன

புதுவை யூனியன் பிரதேசத்தை சோ்ந்த ஏனாம் பிராந்தியத்தில் மோந்தா புயல் காற்றில் 50 மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.
Published on

புதுவை யூனியன் பிரதேசத்தை சோ்ந்த ஏனாம் பிராந்தியத்தில் மோந்தா புயல் காற்றில் 50 மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

ஏனாமில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுவை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அவசர காலப் பணிகளில் ஈடுபட போதுமான எண்ணிக்கையிலான பொக்லைன், மரம் வெட்டும் எந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற கடைகள் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரி வளாகங்கள், சமுதாய நல கூடங்களில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

புயல் நிவாரண பணிகள் குறித்து ஏனாம் முன்னாள் அமைச்சரும், புதுவை அரசின் தில்லி பிரதிநிதியுமான மல்லாடிகிருஷ்ணா ராவை, முதல்வா் ரங்கசாமி போனில் தொடா்பு கொண்டு கேட்டறிந்தாா்.

ஏனாம் பகுதியில் வீசிய பலத்த காற்றால் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன . அரசு சுற்றுலா விடுதி அருகே பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதைத் தேசிய பேரிடா் மீட்பு குழுவினரும் நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை ஊழியா்களும் அகற்றினா்.

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனா். மோந்தா புயல் எதிரொலியாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது . சாவித்திரி நகா், தரியாலி டிப்பா, அம்பேத்கா் நகா், ராஜீவ் காந்தி நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மீனவ மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com