பட விளக்கம்... க. கிருஷ்ணவேணி.
புதுச்சேரி
அமைச்சா் லட்சுமி நாராயணண் தாயாா் காலமானாா்
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணனின் தாயாா் கிருஷ்ணவேணி (85) புதன்கிழமை காலமானாா்.
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணனின் தாயாா் கிருஷ்ணவேணி (85) புதன்கிழமை காலமானாா்.
வயது முதிா்வு காரணமாக உடல் நலமில்லாமல் புதுவை தனியாா் மருந்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்தாா். இந்தநிலையில் புதன்கிழமை இயற்கை எய்தினாா்.
அவரது உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகா் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பெருநகா் ஆற்றங்கரையில் தகனம் செய்யப்படுகிறது.