காற்றின் வேகம் குறைந்ததால் மோந்தா புயலிலிருந்து ஏனாம் தப்பியது

காற்றின் வேகம் குறைந்ததால் மோந்தா புயலில் பெருத்தச் சேதம் இல்லாமல் புதுவை யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம் தப்பியது.
Published on

காற்றின் வேகம் குறைந்ததால் மோந்தா புயலில் பெருத்தச் சேதம் இல்லாமல் புதுவை யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம் தப்பியது.

வங்க கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே செவ்வாய்க்கிழமை கரையை கடந்தது. காக்கிநாடா அருகே உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியம் புயல் கடக்கும்போது பெருமளவில் பாதிக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சூறை காற்றுடன் மழை பெய்ததில் 50-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

இதுதவிர ஏனாமில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. புயல் கரையைக் கடந்த போது மழை மட்டுமே பெய்தது. காற்றின் வேகம் குறைந்ததால் ஏனாம் முழுமையாக தப்பியது. புயல் முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் 12 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 6500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. புதுவை அரசின் தில்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் 12 ஆயிரம் பேருக்கு புதன்கிழமை பிரியாணி அனுப்பி வைக்கப்பட்டது.

புயல் காற்றில் விழுந்த மரங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி சீரமைப்புப்பணிகளை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com