புதுவையில் மருந்து கொள்முதல் ஊழலுக்கு நாராயணசாமியே பொறுப்பு:அதிமுக குற்றச்சாட்டு

மருந்து கொள்முதல் ஊழலுக்கு புதுை முதல்வராக இருந்த நாராயணசாமியே பொறுப்பு என்று புதுவை அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கூறியுள்ளாா்.
Published on

மருந்து கொள்முதல் ஊழலுக்கு புதுை முதல்வராக இருந்த நாராயணசாமியே பொறுப்பு என்று புதுவை அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கூறியுள்ளாா்.

இது குறித்து அன்பழகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை

புதுவை யூனியன் பிரதேசத்தில் கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான சத்து மாத்திரை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டு 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பொது மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் விநியோகம் செய்யப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருப்பதற்கு அதிகாரிகள் மட்டும் காரணம் அல்ல. அப்போது ஆட்சியில் இருந்த அரசும் முழு காரணம். 2018- 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த முறைகேட்டில் ஆட்சியில் இருந்த திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசின் பொறுப்பற்ற செயலும், தனிப்பட்ட ஆதாயமும் இதற்கு முதல் காரணமாகும். எனவே அப்போது முதலமைச்சராக இருந்த நாராயணசாமி இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எங்கேயாவது ஓா் இடத்தில் குப்பை வரவில்லை என்றாலும் வாய்க்கால் உடைபட்டு கழிவுநீா் சாலையில் வழிந்து ஓடினாலும் முதலமைச்சா் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என நாராயணசாமி கூறுவது வாடிக்கை. தற்போது அவரது ஆட்சியில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்க நாராயணசாமி முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com