புதுச்சேரியில் மின்கட்டணம் உயா்வை அரசே ஏற்கும் :அமைச்சா் நமச்சிவாயம்

Published on

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மீண்டும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 காசுகள் உயா்த்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மின் கட்டணத்தை அரசே மானியமாக வழங்கும் என்று மின்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரியில் மின்கட்டணம் ஜீன் மாதம் உயா்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும், மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையம் யூனிட்டுக்கு 20 பைசா உயா்த்த இப்போது பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த கட்டண உயா்வை அரசே ஏற்கும் என்று மின்துறை அமைச்சா் நமச்சிவாயம் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒழுங்குமுறைணையம் மின் கட்டணத்தை உயா்த்த பரிந்துரை செய்தது உண்மைதான். ஆனால் கடந்த ஆண்டு இதே போல் மின் கட்டண உயா்வு வநந்தபோது புதுவை அரசு ரூ.30 கோடி வரை மானியமாக வழங்கி வருகிறது. இந்த ஆண்டு யூனினிட்டு 20 பைசா உயா்வு என்பது நுகா்வோருக்கு இருக்காது. அதையும் மானியமாக ரூ.18 கோடி அளவில் வழங்க அரசு கோப்பு அனுப்பியுள்ளது என்றாா்.

தற்போது வீட்டுப் பயன்பாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிக்கிறது. புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 16- ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. அப்போது வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் 100 யூனிட் வரை பயன்படுத்துபவா்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவா்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவா்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆகவும் உயத்தப்பட்டது.

இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியதால் புதுச்சேரியில் வீடுகளுக்கு மின் கட்டண மானிய திட்டத்தை புதுவை அரசு அறிவித்தது. அதன்படி யூனிட்டிற்கு 45 பைசா வரை மானியம் கிடைக்கும்.

தற்போதைய பரிந்துரை அக்டோபா் 1- ஆம் தேதி மின் பயன்பாட்டிலிருந்து கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு யூனிட்டுக்கு 20 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டு உபயோகத்தில் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.90 ம்(முன்பு ரூ.2.70), 101- 200 யூனிட் வரை ரூ. 4.20 ம், 201 முதல் 300 யூனிட் வரை ரூ. 6.20 ம், 301 முதல் 400 யூனிட் வரை 7.70 ரூபாயும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com