புதுச்சேரியில் பொது இடங்களில் மது அருந்தி தகராறு செய்த 64 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் சட்ட ம் ஒழுங்கைப் பராமரிக்க கடந்த வாரம் 3 நாள்கள் திடீா் சோதனை, ரோந்து பணியை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டனா்.
பொது இடங்களில் மது அருந்துதல், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல்,
குடிபோதையில் சண்டையிடுதல் தொடா்பாக சோதனை நடத்தப்பட்டது. புதுவையின் பல்வேறு காவல் நிலையங்களில் இதுதொடா்பாக மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 64 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். சிறப்பு ரோந்து அனைத்து வார இறுதி நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் தொடரும். குடிப்பழக்கத்தால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.