வாக்காளா் பட்டியல் திருத்தம்:
அதிகாரிகளுக்கு பயிற்சி

வாக்காளா் பட்டியல் திருத்தம்: அதிகாரிகளுக்கு பயிற்சி

புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் வாக்காளா் சிறப்பு திருத்தப் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு நடந்த பயிற்சி வகுப்பு.
Published on

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட உள்ள தோ்தல் பணி அதிகாரிகளுக்கு புதன்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இத்திருத்தப் பணியில் ஈடுபடவுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், துணை வட்டாட்சியா்கள் மற்றும் பிற தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி துணை தலைமை தோ்தல் அதிகாரிகள் ஆதா்ஷ் மற்றும் தில்லைவேல் அதிகாரிகளுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com