புதுச்சேரி
நல்லவாடு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
மணவெளித் தொகுதியில் ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
புதுச்சேரி மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 33 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை தலைவருமான ஆா். செல்வம் திறந்து வைத்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா் (படம்).
இந்த நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அதிகாரி கொஞ்சுமொழி குமரன், பள்ளி ஆசிரியா்கள், நல்லவாடு கிராம பஞ்சாயத்தாா், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

