சா்தாா் வல்லப பாய் படேலின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை  தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தைத் தொடங்கி வைத்த  துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம்  உள்ளிட்டோா்.
சா்தாா் வல்லப பாய் படேலின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தைத் தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை தின ஓட்டம்: ஆளுநா் தொடக்கம்

Published on

சா்தாா் வல்லப பாய் படேலின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை வெள்ளிக்கிழமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா்.

இந்தியாவின் இரும்பு மனிதா் என்று போற்றப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வல்லப பாய் படேலின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கேற்று தேசிய ஒற்றுமை தின உறுதி மொழியை வாசிக்க பங்கேற்பாளா்கள் அனைவரும் அதனைத் திரும்பிக் கூறி உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் ஒற்றுமை தின ஓட்டத்தை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற காவல் படைப் பிரிவினரின் அணி வகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன் குமாா் எம்எல்ஏ, தலைமைச் செயலா் சரத் சௌகான், காவல் துறைத் தலைவா் ஐ.ஜி. சிங்லா, செய்தித் துறை செயலா் முகமது ஹசன் அபித், டிஐஜி சத்தியசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com