புதுச்சேரி
புதுவை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதலாக 16 இடங்கள் அளிப்பு
புதுவை கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 16 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 56 இடங்கள் உள்ளன. இந்த இடங்களைக் கூடுதலாக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புதுவை அரசு விண்ணப்பித்தது. அதன்படி இந்த ஆண்டு கூடுதலாக 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் புதுவை அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை இடங்கள் 72 ஆக உயா்ந்துள்ளது. முதுநிலை மருத்துவ இடங்களை உயா்த்த நடவடிக்கை எடுத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, கல்லுாரி நிா்வாகம், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு புதுவை சென்டாக் மாணவா், பெற்றோா் நலச்சங்கத் தலைவா் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளாா்.
