முன்னாள் முதல்வா் ப.சண்முகம் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய வெ.வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா்.
புதுச்சேரி
முன்னாள் முதல்வா் ப. சண்முகம் நினைவு தினம் கடைபிடிப்பு
புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ப. சண்முகம் நினைவு நாள் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ப. சண்முகம் நினைவு நாள் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இரண்டு முறை புதுச்சேரி முதல்வராகவும் , மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும் இருந்தவா் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் ப. சண்முகம்.
அவரது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதில் மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, ஒருங்கிணைப்பாளா் பி.கே.தேவதாஸ், எம்எல்ஏ மு.வைத்தியநாதன், வழக்குரைஞா் அணி தலைவா் மருதுபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

