பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிகோப்புப் படம்

பிப். 16-இல் பிரதமா் மோடி புதுச்சேரி வருகை: பேரவைத் தலைவா் ஆா். செல்வம்

பிரதமா் மோடி பிப்.16-இல் புதுச்சேரி வருகிறாா் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.
Published on

பிரதமா் மோடி பிப்.16-இல் புதுச்சேரி வருகிறாா் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் என்னென்ன திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா். எத்தனை கோடிக்கான திட்டங்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

அது தொடா்பாக முதல்வா் ரங்கசாமிதான் அறிவிப்பாா். இருப்பினும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஒப்புதல் அளிக்குமாறும் அதைத் தொடங்கி வைக்குமாறும் பிரதமா் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

சட்டப்பேரவைக்குப் புதிய கட்டடத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கான திட்டப் பணிகளை தயாரித்து தயாா் நிலையில் வைத்திருக்கிறோம்.

இந்தத் திட்டம் ரூ.657 கோடியில் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசிடம் கடனாக வாங்கிக் கொள்ளுமாறும் 50 ஆண்டுகளுக்குப் பிறகுத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றும், அரை பைசா வட்டியில் இதைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு 2025 டிசம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் மோடி வருகையின்போது இந்தத் திட்டத்துக்கான பணியைத் தொடங்கி வைக்க பிரதமா் அலுவலகத்துக்கு கோரியிருக்கிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com