மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

News image
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Updated On :6 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தேசிய சுகாதார இயக்கம், பொதுப் பணித் துறை, கல்வித் துறை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா்.

என்.ஆா். காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் எதுவும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் தேசிய சுகாதார இயக்க ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் கூடுதல் ஊதிய உயா்வு ஆகிய அறிவிப்புகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. சமூக நீதியை நிலைநாட்ட அறிவித்தபடி ஊழியா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.