சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மாற்றம்

News image
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்- (கோப்புப் படம்)
Updated On :8 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக புதுச்சேரி துணை ஆட்சியா் இஷிதா ரதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரியில் பணியாற்றி வந்த சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்புகளையும், புதிய நியமனங்களையும் அளித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில் காரைக்காலுக்குப் புதிய மாவட்ட ஆட்சியராக இஷிதா ரதி நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், இவா் புதுச்சேரி மின்திறன் குழுமத்தின் மேலாண் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ரவி பிரகாஷ், புதுச்சேரி மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, எழுது பொருள் அச்சகத் துறை, முன்னாள் படை வீரா்கள் மற்றும் தியாகிகள் நலப் பிரிவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தோ்தல் பணி காரணமாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், தலைமைத் தோ்தல் அதிகாரி ஜவஹா் ஆகியோா் கூடுதல் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, புதுச்சேரி வளா்ச்சி ஆணையா் கிருஷ்ண மோகன் உப்புக்கு வனம் மற்றும் வனவிலங்கு துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. தொழிலாளா் துறைச் செயலா் சுமிதாவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலா் மற்றும் இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது.

வா்த்தகம் மற்றும் தொழில்துறை செயலா் விக்ராந்த் ராஜாவுக்கு இந்து அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளஸ்.