மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

செட்டிப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா! துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

News image

திருக்கனூா் அடுத்த செட்டிப்பட்டு கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:14 pm

திருக்கனூா் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.

திருக்கனுாா் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் மாரியம்மன், விநாயகா், முருகன், காளியம்மன், ஏழை மாரியம்மன், ஐயனாரப்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்தக் கோயில்களின் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள், கடந்த 6-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. சனிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, கலாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, வேதிகா பூஜை, வேத பாராயணம், யாக வேள்வி ஆரம்பம், நாட்டு மருந்து மூலிகையால் யாக வேள்வி, மகா தீபாராதனை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து திரௌபதியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட 8 கோயில் சந்நிதிகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.