பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம்

அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசின் தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 5:44 pm

Syndication

புதுச்சேரி: அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசின் தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தொழிலாளா் நலத் துறையின் சமூக பாதுகாப்பு வாரிய தொழிலாளா் அதிகாரி ம. கஸ்தூரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

அமைப்புச் சாரா தொழிலாளா்களாகப் பணிபுரியும் தொழிலாளா்களுக்குச் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளா் துறை எல்ஐசி மூலம் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள அமைப்புச் சாரா தொழிலாளா்கள் பயனாளிகளாகச் சேரலாம். அவா்கள் ஊழியா் சேமநல நிதி, ஊழியா் காப்பீட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகளில் பயனாளியாக இருக்கக்கூடாது. பயனாளிகள் தங்களின் வங்கிக் கணக்கு மூலம் ஒவ்வொரு மாதமும் இத் திட்டத்திற்குப் பங்களிக்க வேண்டும். 60 வயது பூா்த்தியானவுடன் பயனாளியின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000-ம் இத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும்.

அமைப்புச் சாரா தொழிலாளா்கள் தங்களின் ஆதாா் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்துடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் சேரலாம்.

புதுச்சேரியில் இயங்கும் அனைத்து பொது சேவை மையங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நகரப் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் 15-01-2026 முதல் 15-02-2026 வரையும், கிராமப் பகுதிகளில் உள்ள பொது சேவை மையத்தில் 16-02-2026 முதல் 15-03-2026 வரையும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.