புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மானிய விலை உணவகத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் உணவகம், மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மா் நிறுவனத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் மற்றும் ஜிப்மா் பணியாளா்களுக்குக் குறைந்த விலையில், சுகாதாரமான மற்றும் தரமான உணவு கிடைக்கும்.
இந்த உணவகம் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். விரைவில் 24 மணி நேர சேவையாக விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் மருத்துவமனை வளாகத்தில் இடையறாத உணவு சேவை உறுதி செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆறுமுகம், ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி, புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மருக்கு நாளை விடுமுறை

ஜிப்மருக்கு நாளை விடுமுறை

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


