கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாா்ச் 1-இல் பிரதமா் மோடி புதுச்சேரி வர வாய்ப்பு: முதல்வா் ரங்கசாமி தகவல்

பிரதமா் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

News image
முதல்வா் என். ரங்கசாமி - Center-Center-Chennai
Updated On :11 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

வில்லியனூரில் அரசு சாா்பில் திருமண மண்டப கட்டுமானத்துக்கு புதன்கிழமைஅடிக்கல் நாட்டியப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் கூறியதாவது:

மத்திய அரசு கிராமங்களில் உள்ள சாலைகள், உள்கட்டமைப்பை மேற்படுத்த ரூ.200 கோடி நிதி கொடுத்துள்ளது. இதில் இதுவரை ரூ.150 கோடிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற

பிறகு சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. உயா்த்தப்பட்ட முதியோா் உதவித்தொகை 7-ம் தேதியும், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.2500 உதவித்தொகை 10-ம் தேதியும் சென்றடைந்து விட்டது. மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். முதியோா் உதவித் தொகைக்கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள சுமாா் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்க கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் கொடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து பிரதமா் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, மாா்ச் 1ஆம் தேதி பிரதமா் புதுச்சேரி வருவாா் என்று நினைக்கின்றேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.