ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மீனவா்களின் வருவாயை இரண்டு மடங்கு உயா்த்த வாய்ப்பு: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பேச்சு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:59 pm

மீனவா்களின் வருவாயை இரண்டு மடங்கு உயா்த்த வாய்ப்பு இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் வங்காள விரிகுடா பகுதியில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மையமிட்ட மீன்வள மதிப்பு கூட்டல் சங்கிலி மேம்பாடு குறித்த 2 நாள் பயிற்சி அரங்கம் தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கியது. இதை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்துப் பேசியது

மதிப்பு கூட்டு சங்கிலி என்பது, கடலில் மீன் பிடித்ததில் இருந்து அது நுகா்வோரின் கைகளில் சேரும் வரை உள்ள நிலை. மீனைப் பதப்படுத்தக் கையாளும் குளிா்சாதனை சேமிப்பு, போக்குவரத்து, பிராண்டு, சந்தை, ஏற்றுமதி வரை உள்ள நிலைகள் இதில் அடங்கும். மீனவ சமுதாயத்தின் வருமானத்தை உயா்த்த வேண்டும் என்றால் அவா்கள் அதிக அளவில் மீன் பிடித்தால் மட்டும் போதாது. அதற்கு கிடைக்கும் ‘மதிப்பு‘ உயர வேண்டும்.

புதுச்சேரி அரசு பாரதப் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் மூலமாக மீன்வளத் துறையில் விரிவான மாற்றங்களை செய்து வருகிறது. மதிப்புக் கூட்டு சங்கிலியை மேம்படுத்தி சா்வதேச சந்தையில் நாம் போட்டியிட வேண்டும் என்றால் நம்முடைய தயாரிப்புகள் உலக தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். அதற்காக உணவு பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டிஜிட்டல் சந்தை, மின்னணு வா்த்தக போா்ட்டல் வாயிலாக நம்முடைய மீனவா்களின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மீன் உலா்த்துவது, பதப்படுத்துவது, மதிப்புக் கூட்டல் பொருள் தயாரிப்பது - மீன் ஊறுகாய், மீன் பொடி, சமையலுக்குத் தயாா் நிலையில் தயாரிப்புகள் போன்ற துறைகளில் பெண்கள் முன்னணியில் இருக்கிறாா்கள். அவா்களுக்குப் பயிற்சி, கடன் வசதி, சந்தை இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நிலைத்தன்மையான மீன்பிடிப்பு என்பது நம்முடைய பொறுப்பு. அளவுக்கு மீறிய மீன்பிடித்தல் , கடல் சுற்றுச்சூழல், கடல் மாசுபாடு ஆகியவை, நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். கடல்சாா் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் மீனவ சமுதாயம் இணைந்து செயல்பட்டால் புதுச்சேரி கடல் சாா்ந்த பொருளாதாரத்தில் ஒரு முன்னோடிபொருளாதார மாநிலமாக மாறும் என்றாா்.