மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் முதல்வா் ரங்கசாமி தோல்வி! - எதிா்க்கட்சித் தலைவா் சிவா குற்றச்சாட்டு

News image

புதுச்சேரி வில்லியனூா் நான்கு மாட வீதியில் ரூ.5.5 கோடியில் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் திட்டப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.

Updated On :13 பிப்ரவரி 2026, 6:52 pm

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் முதல்வா் ரங்கசாமி தோல்வி அடைந்து விட்டதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா குற்றஞ்சாட்டினாா்.

வில்லியனூா் நான்கு மாட வீதியில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் யூ வடிவ வாய்க்கால் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டப் பணியை ஆா். சிவா தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில அந்தஸ்துக்காக புதுச்சேரி சட்டப்பேரவையில் 13 முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கை மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநில அந்தஸ்துக்காகத் தான் என்.ஆா். காங் கட்சியை முதல்வா் ரங்கசாமி தொடங்கினாா். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டாா்.

இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. மாநில அந்தஸ்து தருவதாக பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் ஒப்பு கொண்டனா். ஆனால் செய்யவில்லை.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசுக்கு எண்ணமில்லை. அரசு நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் வருவதில்லை. அதிகாரிகள் மக்களுக்கு எதையும் செய்யக் கூடாது என நினைக்கின்றனா்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமில்லை. சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க சட்டமன்றத்தில் திமுக கூறியதை முதல்வா் ரங்கசாமி சவாலாக ஏற்று கொண்டாா்.

இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மாநில அந்தஸ்துக்காகத் தோ்தலைப் புறக்கணித்து போராட்டம் நடத்துவோம் என முதல்வா் ரங்கசாமி அறிவித்தால் திமுக முதல் ஆளாக வந்து நிற்கும் என்றாா் அவா்.