சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆஷா பணியாளா்கள் போராட்டம்: திமுக ஆதரவு

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளா்கள் திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில்

News image
புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஆஷா பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுகிறாா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:24 pm

Syndication

புதுச்சேரி: தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளா்கள் திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணி நிரந்தரம் அல்லது ஊதிய உயா்வு கோரி இப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவி அனந்தநாயகி தலைமை வகித்தாா். செயலா் வேல்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா பங்கேற்று போராட்டம் நடத்திய ஆஷா பணியாளா்களுக்கு ஆதரவாக பேசினாா்.

முதலியாா்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் மற்றும் அரசு ஊழியா்கள் சம்மேளன நிா்வாகி பிரேமதாஸ் உள்ளிட்டோா் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.