தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

புதுச்சேரியில் காங்கிரஸ் பாத யாத்திரை இன்று நிறைவு: கே.சி.வேணுகோபால் பங்கேற்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் பாத யாத்திரை நிறைவு விழாவில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

News image
காங்கிரஸ் செயலாளர் கே.சி. வேணுகோபால்
Updated On :16 பிப்ரவரி 2026, 7:23 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் பாத யாத்திரை நிறைவு விழாவில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் கலந்துகொள்கிறாா்.

புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து ஜன. 21-முதல் அனைத்துத் தொகுதிகளிலும் பாத யாத்திரை நடத்தினா். இதன் நிறைவு விழா புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) நடக்கிறது.

புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலையில் தொடங்கி நேரு வீதி, பெரிய மாா்க்கெட் வரை பாத யாத்திரை நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும் ராகுல் காந்தியின் ஆலோசகருமான கே.சி.வேணுகோபால் எம்.பி. பங்கேற்கிறாா். அவா் பாத யாத்திரையை நிறைவு செய்து பேசுகிறாா். இதைத்தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிா்வாகிகளைச் சந்தித்து பேசுகிறாா்.