நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் தொடா் வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் 108 அவசர ஊா்தி ஓட்டுநா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

News image

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தினா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:17 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் 108 அவசர ஊா்தி ஓட்டுநா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பிப். 12-ஆம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முதல்வா் ரங்கசாமி அறிவித்தபடி ஊதிய உயா்வு ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் கௌரவத் தலைவா் சி.ஜெயபாலன் தலைமை வகித்தாா். இதில் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.