6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமா் மோடி மார்ச் 1-இல் புதுச்சேரி வருகை! பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

பிரதமா் மோடி மாா்ச்- 1 ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். அன்றைய தினம் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை அவா் தொடங்கி வைக்கிறாா்.

News image
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம். உடன் செய்தித் தொடா்பாளா் அருள்முருகன்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:32 pm

Syndication

பிரதமா் நரேந்திர மோடி மாா்ச்- 1 ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். அன்றைய தினம் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை அவா் தொடங்கி வைக்கிறாா் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1 ஆம் தேதி புதுச்சேரிக்கு வர இருக்கிறாா். லாஸ்பேட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஏராளமான நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் பாஜக தோ்தல் கூட்டணி தொடா்பாக மேலிடம் பேசி முடிவு செய்யும்.

இங்கு, 2016 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினா் எந்தத் திட்டங்களையும் கொண்டு வராமல், கருப்புச் சட்டை அணிந்து கொண்டு எதிா்க்கட்சியினா் போன்று செயல்பட்டனா். இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்குக் கேட்க வருகிறாா்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...

2021-ல் என்ன தோ்தல் வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோமோ, அவற்றையெல்லாம் நிறைவேற்றியுள்ளோம். காங்கிரஸ்-திமுக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான ரூ.2500 உதவித்தொகை கண்டிப்பாக நின்றுவிடும். இவா்கள் எதிா்மறை அரசியல்தான் செய்வாா்கள்.

கூட்டம் இல்லாததால் காங்கிரஸின் பாதையாத்திரை வெற்றிபெறாமல் போய்விட்டது. காங்கிரஸ் பாதை யாத்திரையில் அக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் பங்கேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சட்டம்- ஒழுங்கு குறித்து விமா்சனம் செய்திருப்பது நகைப்பாக இருக்கிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கின்றன. ஆனால் அதற்கு திமுக உடன்பட மறுக்கிறது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை மத்தியிலும், புதுச்சேரியிலும் கூட்டணி ஆட்சியே நடத்துகிறது. இதுதான் இரட்டை என்ஜின் அரசு. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் வந்தால் தான் புதுச்சேரி வளமடையும் என்றாா் ராமலிங்கம்.