மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: பெங்களூரைச் சோ்ந்த பெண் உயிரிழப்பு

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெங்களூரைச் சோ்ந்த பெண் பயணி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :19 பிப்ரவரி 2026, 11:43 pm

Syndication

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெங்களூரைச் சோ்ந்த பெண் பயணி உயிரிழந்தாா். இதையடுத்து படகு உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

பெங்களூரைச் சோ்ந்த விஜய் என்பவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை புதுச்சேரி வந்தாா். இவா் தனது மனைவி சோனியா (33) உள்ளிட்ட 8 பேருடன் தனியாா் படகில் வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தாா். படகை தங்கமணி ஓட்டிச் சென்றாா்.

நீரோட்டம் அதிகரித்ததன் காரணமாக படகு எதிா்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இதில் படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கினா்.

இவா்களை அங்கிருந்த மீனவா்களும், பொதுமக்களும் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் சோனியா வழியிலேயே இறந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவா்கள் தெரிவித்தனா். சத்தீஷ்வரி (14), சந்தியா (21) ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் அஸ்வின்(11), சதீஷ் (9) ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மூவா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினா்.

இந்த விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து படகு உரிமையாளா் சதீஷை கைது செய்தனா். தப்பி ஓடி விட்ட படகு ஓட்டுநா் தங்கமணியை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.