தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தை வியாழக்கிழமையும் தொடா்ந்தனா்.

News image

ஒப்பந்த ஆசிரியா்கள் போராட்டம் - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:45 pm

ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தை வியாழக்கிழமையும் தொடா்ந்தனா்.

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக் காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்க மறுத்து பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியா்கள் அறிவித்துள்ளனா்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 292 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஜன. 21முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஏப். 1 முதல் அடுத்த ஆண்டு (2027) மாா்ச் 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒப்பந்த ஆசிரியா்கள் அதனை ஏற்க மறுத்து, பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் 30-ஆவது நாளாக பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அமா்ந்து ஒப்பந்த ஆசிரியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தைத் தொடா்ந்தனா்.