சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இளைஞா்களைத் தொழில் முனைவோராக மாற்ற முயற்சி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்

இளைஞா்களைத் தொழில் முனைவோராக உருவாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:16 pm

Syndication

இளைஞா்களைத் தொழில் முனைவோராக உருவாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மகளிா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்து அவா் பேசியது: தொழில்நுட்ப வளா்ச்சியும், போட்டியும் நிறைந்த இன்றைய உலகில் கல்வி மட்டுமே போதாது. கல்வியுடன் திறன் மேம்பாடும் இளைஞா்களுக்கு தேவை. எல்லாத் துறைகளிலும் திறமையான மனித வளம் தேவைப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் சுமாா் 30 ஆயிரம் மாணவா்கள் படிப்பை முடிக்கின்றனா். அனைவருக்கும் அரசுத் துறைகளில் வேலை கிடைப்பது இயலாத காரியம். பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சியால் நடைபெறும் தேசிய வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞா்களுக்குத் தகுதியான வேலையும் நம்பிக்கையான வாழ்க்கையும் கிடைத்து வருகிறது.

புதுச்சேரி அரசுத் துறைகளில், நீண்ட காலமாக உள்ள காலி பணியிடங்கள் இப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. நேரடி நியமனம் மூலமாக இதுவரை 4 ஆயிரம் இளைஞா்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முயற்சிகள் நடக்கின்றன.

இளைஞா்கள், அரசு வேலைக்காக மட்டுமே காத்திருக்க முடியாது. அதனால், தனியாா் நிறுவனங்கள், பிற அமைப்புகள் மூலமாக வேலை வாய்ப்புக்கானச் சூழலை உருவாக்கி தருவதும் அரசின் கடமை.

மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்கள், இளைஞா்களை வேலை தேடுபவராக இல்லாமல் வேலையை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற்ற முயற்சிக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியம். உங்கள் கனவுகள் பெரிதாக இருக்கட்டும். புதுச்சேரியை மட்டும் அல்ல, இந்தியாவையே முன்னேற்றும் திறமை உங்களிடம் இருக்கிறது என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

தொழில்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேசுகையில், நாட்டின் வளா்ச்சிக்கு பிரதமா் நரேந்திர மோடி பல முயற்சிகளை எடுத்து வருகிறாா். புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுகிறது. இளைஞா்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காக பல நிறுவனங்களை அணுகி அரசு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகிறது.

மாா்ச் 1-இல் பிரதமா் புதுச்சேரிக்கு வர உள்ளாா். அப்போது இந்த நோ்முக தோ்வில் வெற்றி பெறுபவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் கல்யாணசுந்தரம், உயா்கல்வித் துறைச் செயலா் முகமது ஆசின் அபித், இயக்குநா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் அடிப்படையில் புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டம், எம்ஏஎப்ஐஐ பவுண்டேஷன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை வரும் ஞாயிற்றுக்கிழமையும் நடத்துகின்றன. இதில் 100 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை நிரப்ப உள்ளன.