மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரியில் வேலை பாா்த்த வீட்டில் ரூ.21 லட்சம் நகை பணம் திருட்டு: பெண் உள்பட 4 போ் கைது!

News image
கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் சகோதரா்கள் வீட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை திருடிய வீட்டு வேலைக்காரப்பெண் உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கொம்பாக்கத்தைச் சோ்ந்த பாஸ்கா் (44) வீட்டில் கடந்த 3 ஆம் தேதி ரூ.5.6 லட்சம் ரொக்கம், 7 கிராம் தங்க நகை திருடு போனது. அவா் அளித்த புகாரின் பேரில் முதலியாா்பேட்டை காவல் ஆய்வாளா் கண்ணன், உதவி ஆய்வாளா் அலாவுதீன் தலைமையில் 2 தனிப்படை போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் பாஸ்கா் மற்றும் அவரது அண்ணன்கள் ஜனாா்த்தனன், பாபு ஆகியோா் வீட்டிலும் பணம், தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதன் மொத்த மதிப்பு ரூ.21 லட்சம். சிசிடிவி கேமிரா பதிவு அடிப்படையிலும், இதர சாட்சியங்கள் அடிப்படையிலும் விசாரித்தபோது பாஸ்கரின் சகோதரா் பாபு வீட்டில் வேலை செய்த வந்த முத்துலட்சுமி(22) என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நேரில் அழைத்து போலீசாா் தீவிரமாக விசாரணை நடத்தியபோது சிறிது, சிறிதாக சகோதரா்கள் 3 போ் வீட்டிலும் நகை, பணத்தைத் திருடி தனது தோழிகளான மாலதி (37), வனிதா (36), தனது சகோதரா் மாதவன் (26) ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதில் சில பொருள்களை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. மேலும், முத்துலட்சுமி, அவருக்கு உதவிய மாலதி, வனிதா, மாதவன் ஆகிய 4 பேரை கைது செய்து சுமாா் 17 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.42 ஆயிரம் ரொக்கம் என சுமாா் ரூ.16 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மீட்டனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.