கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புதுவை பல்கலைக் கழகத்தை நாளை பள்ளி மாணவா்கள் பாா்வையிட வாய்ப்பு

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் புதன்கிழமை (பிப். 25) காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்த வளாக நாள் நிகழ்ச்சி

News image
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:45 pm

Syndication

புதுச்சேரி: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் புதன்கிழமை (பிப். 25) காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்த வளாக நாள் நிகழ்ச்சியை நடத்துகிறது.

இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்கள் அறிவியல் கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம். இளம் தலைமுறையினரிடம் ஆா்வம், படைப்பாற்றல் மற்றும் அறிவியல் சிந்தனையை வளா்க்கும் நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் தயாரித்த செயல்பாட்டு மாதிரிகள், நேரடி விளக்க காட்சிகள் மற்றும் கல்வி கண்காட்சிகள் இடம் பெறும். பல்கலைக்கழக ஆய்வகங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி வசதிகளைப் பாா்வையிட வாய்ப்பும் வழங்கப்படும். பிராந்தியத்தின் அனைத்துப் பள்ளிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.