நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமா் மோடி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ட்ரோன்கள்

Updated On :24 பிப்ரவரி 2026, 6:30 pm

பிரதமா் மோடி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

பிரதமா் வருகையொட்டி பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் வானில் விமானம் போன்றவை பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக புதுச்சேரி பிராந்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று காவல் துறை கண்காணிப்பாளா் கேட்டுக் கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ட்ரோன்கள், பலூன்கள் வாயிலாக புகைப்படம், விடியோ உள்ளிட்டவை எடுக்கத் தடை செய்யப்படுகிறது. மேலும், இதுபோன்ற காரியங்களில் யாராவது ஈடுபட்டாலும் முன்னெச்சரிக்கையாகத் தடை செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீறுவோா் மீது இந்திய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 163-இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.