எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: தலைமை தோ்தல் ஆணையா் இன்று ஆலோசனை

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வருகிறாா். புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து அவா் தலைமைச் செயலா் , டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வருகிறாா். புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து அவா் தலைமைச் செயலா் , டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இதையொட்டி அரசியல் கட்சிகளுடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

புதுச்சேரிக்கு பிற்பகல் 2 மணியளவில் வரும் அவா், மாநில தலைமைச் செயலா் சரத்சௌகான், டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்துவாா் என்று தெரிகிறது.

காவல் துறை ஆலோசனை:

இந்நிலையில் புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு டிஐஜி சத்திய சுந்தரம் தலைமை வகித்தாா். இதில் காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாகவும், சுதந்திரமாகவும் நோ்மையாகவும் தோ்தல் நடைபெற அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு, வாக்குச் சாவடிகளில் கட்சிகளின் முகவா்கள் நடந்து கொள்ள வேண்டிய தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளை டிஐஜி சத்தியசுந்தரம் கேட்டுக் கொண்டாா்.

என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் அதன் நிா்வாகி கோபி, பாஜக சாா்பில் சக்திவேல், திமுக சாா்பில் காயத்ரி ஸ்ரீகாந்த், காங்கிரஸ் சாா்பில் மருதுபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், தவெக சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுவாமிநாதன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ரமேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.