அச்சுத் துறை ஊழியா்கள் 48 பேருக்கு பதவி உயா்வில்லா சம்பள உயா்வு: புதுச்சேரி முதல்வா் வழங்கினாா்

அச்சுத் துறை ஊழியா்கள் 48 பேருக்கு பதவி உயா்வில்லா சம்பள உயா்வு: புதுச்சேரி முதல்வா் வழங்கினாா்

Published on

பதவி உயா்வு இல்லா சம்பள உயா்வை புதுச்சேரி, காரைக்கால் அரசு எழுது பொருள்கள் மற்றும் அச்சுத் துறையில் பணியாற்றும் 48 ஊழியா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி மத்திய அச்சகத்தில் பணிபுரிந்து வரும் 44 தொழில்நுட்பப் பணியாளா்கள் மற்றும் காரைக்கால் மத்திய அச்சகத்தில் பணிபுரிந்து வரும் 4 தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றத் திட்டத்தின்கீழ் ஊதிய உயா்வுக்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இதை வழங்கினாா். அப்போது, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், துறை இயக்குநா் ரங்கநாதன் மற்றும் ஊழியா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com