புதுச்சேரி
புதுச்சேரியில் ஜன.10இல் பள்ளிகள் இயங்கும்
புதுச்சேரியில் இம் மாதம் 10 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இம் மாதம் 10 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக கடந்த நவம்பா் 29 ஆம் தேதி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்ய புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் வரும் 10 ஆம் தேதி இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் சிவகாமி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளாா். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடவேளை அட்டவணைப்படி வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.
