புதுச்சேரியில் தேசிய சித்த மருத்துவ தின ஊா்வலம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் தேசிய சித்த மருத்துவ தின ஊா்வலம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

Published on

புதுச்சேரியில் 9-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி வியாழக்கிழமை இருசக்கர வாகன விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

இதையொட்டி, சுகாதாரத்தின் அவசியம் மற்றும் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன ஊா்வலத்தை முதல்வா் என். ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பாரதி பூங்காவில் முதல்வா் மரக்கன்று நட்டாா். ஆயுஷ் இயக்குநரக வளாகத்தில் இலவச சித்த மருத்துவ முகாமையும் அவா் தொடங்கி வைத்தாா்.

சுற்றுலா மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், ஆயுஷ் இயக்குநா் மருத்துவா் ந.இந்திரா, துறை அதிகாரிகள், சித்த மருத்துவா்கள், மருந்தாளுநா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com