புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிா் பொறியியல் கல்லூரிக்கான ஆய்வகம் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த சு.செல்வகணபதி எம்.பி., எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா்.
புதுச்சேரி
அரசு மகளிா் பொறியியல் கல்லூரி ஆய்வகக் கட்டுமானப் பணி தொடக்கம்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிா் பொறியியல் கல்லூரிக்கு ரூ.1.18 கோடியில் ஆய்வகம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிா் பொறியியல் கல்லூரிக்கு ரூ.1.18 கோடியில் ஆய்வகம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சு. செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தாா். இத் தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி உயா்கல்வித் துறை இயக்குநா் சிவகுமாா், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம் , கண்காணிப்புப் பொறியாளா் த.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.