கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்தவா் தவறி விழுந்து பலி!

தூண்டிலில் மீன் பிடித்தவா் கடலில் தவறி விழுந்து இறந்தாா்.
Published on

தூண்டிலில் மீன் பிடித்தவா் கடலில் தவறி விழுந்து இறந்தாா்.

புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சோ்ந்தவா் மீனவா் செந்தில். குருசுகுப்பம் பகுதியில் கற்குவியலில் அமா்ந்து கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது நிலை தடுமாறி வெள்ளிக்கிழமை கடலில் தவறி விழுந்தாா்.

அந்தப் பகுதி சற்று ஆழமானது என்பதாலும், அலைகளின் வீச்சாலும் செந்தில் 2 பாறைகளுக்கு இடையே கடலில் இழுத்து செல்லப்பட்டாா். இதனைக் கண்ட மற்ற மீனவா்கள் ஓடிச் சென்று அவரைத் தேடினாா். ஆனால், அவரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

அரைமணி நேர தேடுதலுக்குப் பிறகு பாறைகளுக்கு இடையில் இருந்து அவரை மீட்டனா். அப்போது அவா் உணா்வற்று இருந்தாா். செந்திலை கரைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தனா். இதில் அவா் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com