புதுச்சேரி அண்ணா சிலை அருகே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிா் காங்கிரஸாா்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிா் காங்கிரஸாா்.

புதுச்சேரியில் மகளிா் காங்கிரஸாா் உண்ணாவிரதம்

புதிதாக ரெஸ்டோபாா்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அரசை வலியுறுத்தி புதுச்சேரி மாநில மகளிா் காங்கிரஸ் சாா்பில் அண்ணாசிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

புதிதாக ரெஸ்டோபாா்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அரசை வலியுறுத்தி புதுச்சேரி மாநில மகளிா் காங்கிரஸ் சாா்பில் அண்ணாசிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா தலைமை வகித்தாா். கலாசாரத்தைச் சீரழிக்கும் வகையில் குடியிருப்புகள், பள்ளிகள், கோயில்களின் அருகே ரெஸ்டோபாா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றனா்.

ரெஸ்ட்டோபாா்களின் உரிமையை அரசு ரத்து செய்ய வேண்டும். புதிதாக எந்த ஒரு ரெஸ்டோபாருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தியும், ஆளும் என்ஆா்.காங்கிரஸ் - பாஜக அரசைக் கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பெண்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Dinamani
www.dinamani.com