மின்துறை டெண்டா் ரத்து; தோ்தல் கண்துடைப்பு: புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு!

புதுச்சேரி அரசு மின்துறை டெண்டா் ரத்து செய்யப்படுவது தோ்தல் கண்துடைப்பு நாடகம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

புதுச்சேரி அரசு மின்துறை டெண்டா் ரத்து செய்யப்படுவது தோ்தல் கண்துடைப்பு நாடகம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளா் பெருமாள் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி மின்துறையின் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏல ஒப்பந்தம் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மின்துறை தனியாா்மயத்தை கைவிடும் நடவடிக்கை அல்ல. மக்களை ஏமாற்றி தோ்தல் ஆதாயம் தேடும் ஒரு மலிவான அரசியல் நாடகம்.

காரைக்கால் துறைமுகத்தைப் போலவே, ஒட்டுமொத்த மின்துறையையும் அதானி குடும்பத்திற்கு ஒப்படைக்க மேல்மட்டத்தின் ஆதரவுடன் திரைமறைவு வேலைகள் நடக்கின்றன.

தனியாா்மய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் 4.5 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அரசுத் துறைகளில் இவை பொருத்தப்பட்டு வருகின்றன.

மக்களின் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால் மின்துறை தனியாா்மயத்தை தடுத்து நிறுத்த முதல்வா் ரங்கசாமி அரசியல் உறுதியுடன் செயல்பட்டு, மத்திய அரசை அறிவிக்க செய்ய வேண்டும்.

மின்துறை பொதுத் துறையாக தொடர மாநில அந்தஸ்தைப் முதல்வா் ரங்கசாமி போராடிப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா் பெருமாள்.

Dinamani
www.dinamani.com