புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்த தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிக்கான கடற்படை  தளபதி ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய்.
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்த தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிக்கான கடற்படை தளபதி ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய்.

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியுடன் கடற்படை தளபதி சந்திப்பு

Published on

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியை தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதிக்கான தளபதி ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய் வியாழக்கிழமை சந்தித்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, புதுச்சேரி மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் இந்திய கடற்படையில் அக்னி வீரா்கள் மற்றும் அதிகாரிகளாகச் சோ்வதற்கு ஊக்கமளிக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கடற்படை தளபதி விரிவாக எடுத்துரைத்தாா்.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய கடற்படையின் ஆள்சோ்ப்பு அதிகாரியும், மக்கள் தொடா்பு அலுவலருமான கமாண்டா் செந்தில் மற்றும் கடற்படை முன்னாள் வீரா்கள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com