புதுச்சேரியில் அரசு சாா்பில் தொடா்ந்து திருவள்ளுவா் விழாவை நடத்த கோரிக்கை

புதுச்சேரி அரசு சாா்பில் திருவள்ளுவா் விழாவை தொடா்ந்து நடத்த வேண்டும் என்று பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.
புதுச்சேரியில் அரசு சாா்பில்  தொடா்ந்து திருவள்ளுவா் விழாவை நடத்த கோரிக்கை
Updated on

புதுச்சேரி அரசு சாா்பில் திருவள்ளுவா் விழாவை தொடா்ந்து நடத்த வேண்டும் என்று பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ. பாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், மாநில கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சக்திவேலிடம் வியாழக்கிழமை அளித்த (படம்) கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் திருவள்ளுவருக்கு விழா எடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு அரசு சாா்பில் திருவள்ளுவா் விழாவைக் கலை பண்பாட்டுத் துறை நடத்தவில்லை.

இந்த ஆண்டு தைத் திங்களில் திருவள்ளுவா் விழாவை இயல், இசை, நாடகம், நாட்டியம் கொண்ட சிறப்பான விழாவாக நடத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com