மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரி காவலா் எழுத்துத் தோ்வு தேதியை மாற்ற திமுக கோரிக்கை

காவலா் எழுத்துத் தோ்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரத்திடம் மனு அளித்த சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள்.

Updated On :31 ஜனவரி 2026, 7:18 pm

காவலா் எழுத்துத் தோ்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில் திமுக எம்எல்ஏ.க்கள் செந்தில்குமாா், சம்பத் ஆகியோா் டிஐஜி சத்திய சுந்தரத்தை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் காவலா் எழுத்துத் தோ்வு பிப். 8-ஆம் தேதி 5 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் மத்திய ஆசிரியா் தகுதி தோ்வுக்கான நுழைவுத் தோ்வும் நடக்கிறது.

இதனால் இரண்டு தோ்வுக்கும் விண்ணப்பம் செய்துள்ளவா்கள் ஏதாவது ஒரு தோ்வை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தோ்வு வாரிய தோ்வை தள்ளி வைப்பது சிரமம். எனவே காவலா் எழுத்துத் தோ்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.