புதுச்சேரியில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 73-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், முன்னாள் மாநிலத் தலைவா் தாமோதரன், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சியாமா பிரசாத் முகா்ஜியின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அவரது தேசப்பற்று மிக்க வாழ்க்கை, தியாகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அவா் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து வி.பி. ராமலிங்கம் விளக்கிக் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்துத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: சிஐடியு மாநிலத் தலைவா் சௌந்தரராஜன்

ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி!

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்

அமித்ஷாவை இன்று சந்திக்கிறாா் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



