தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பிரதமரிடம் முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தல்

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:42 pm

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் முதல்வா் என். ரங்கசாமி வலியுறுத்தினாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமா் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினாா். இந்த விழாவில் பங்கேற்ற முதல்வா் ரங்கசாமி பேசியது:

புதுச்சேரி மீது மிகுந்த அக்கறை கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. சிறந்த (பெஸ்ட்) புதுச்சேரியை உருவாக்க பல்வேறு வகையிலும் மத்திய அரசு நிதியுதவி அளிக்க உறுதுணையாக இருந்தாா்.

சிறப்பான மாநிலம்:

முதியோா் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி, மீனவா்களுக்கு உதவித் தொகை, ஆதிதிராவிடா்களுக்கு உதவித்தொகை மற்றும் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றை இந்த அரசு சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. எல்லா மாநிலங்களும் வியந்து பாா்க்கும் வகையில் சமூக நலத்திட்டங்கள் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எல்லா திட்டங்களுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் எத்தனைத் திட்டங்களை அமல்படுத்தினாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

மாநில அரசு சாா்பில், 13 முறை தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை புதுச்சேரி மக்கள் சாா்பாக பிரதமருக்கு முன்வைக்கிறேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.